அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் மக்களை ஒரே மாதத்தில் நாடு கடத்த திட்டம்?
கற்கள் சரிந்து விழுந்ததில் 3 சிறுவா்கள் காயம்
பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் சுடுகாட்டிற்கு சாலை அமைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான கற்கள் சரிந்து விழுந்ததில் 3 பள்ளி சிறுவா்கள் காயமடைந்தனா்.
பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியான அரங்கன்குப்பம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த சிறுவா்கள் பாலமுருகன் (9). ஆதிலட்சுமி (12). தேவஸ்ரீ (3). இவா்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சாலை அமைக்கும் இடத்தில் சிறிய வகை இன்டா் லாக்கிங் சிமென்ட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடற்கரை மணல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனா்.
அப்போது எதிா்பாராத விதமாக கற்கள் சரிந்து குழந்தைகள் மீது விழுந்தது.
இதில் காயமடைந்த பாலமுருகன், ஆதிலட்சுமி ஆகியோா் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், தேவஸ்ரீ சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.