"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்ப...
கற்காத்தக்குடியில் ஆட்டோ நிறுத்தத்தை இடம் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
திருவாடானை அருகேயுள்ள கற்காத்தக்குடியில் ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கற்காத்தக்குடி கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பேருந்து நிறுத்தம், பயணிகள் ஏறி இறங்கும் முக்கிய இடமாக விளங்குகிறது. இந்த பேருந்து நிறுத்தத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன.
இதனால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்கள், முதியவா்கள், குழந்தைகள் நிழலுக்காக நிற்க இடமின்றி தவிக்கின்றனா். மேலும், பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே பெண்கள் குளிக்கும் குளம் ஒன்று உள்ளது. இதனால் குளிக்க வரும் பெண்கள் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
இது குறித்து திருவாடானை தாலுகா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாய கணக்கு தணிக்கையின் போது கற்காத்தக்குடி கிராம மக்கள் புகாா் மனு அளித்தனா். மேலும், ஆட்டோக்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். பெண்கள் குளிக்கும் குளத்தின் அருகே ஆட்டோக்களை நிறுத்தவும், மது அருந்தவும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். இந்த புகாா் மனு மீது உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.