செய்திகள் :

கலப்படத்தால் நடுவழியில் நின்ற பாதுகாப்பு வாகனம்! டாக்ஸியில் சென்ற ஈரான் அதிபர்!

post image

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் பழுதானதால், அவர் டாக்ஸி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்களில் இன்று (ஜூலை 18) செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அந்நாட்டின் தர்பிஸ் நகரத்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, கஸ்வின் மாகாணத்தின் டகேஸ்தான் நகரத்தின் அருகில் வந்தபோது, அவரது 3 பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் பழுதடைந்து நின்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அம்மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உதவியைப் பெற விரும்பாமல், அதிபர் பெசெஷ்கியன், அங்குச் செயல்படும் தனியார் டாக்ஸியில் தனது மீதி பயணத்தைத் தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அதிபரின் 3 பாதுகாப்பு வாகனங்களுக்கும், ராஷ்ட் நெடுஞ்சாலையில் உள்ள எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் நிரப்பட்டதும், அந்த எரிபொருளில் தண்ணீர் கலந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, வெளியான செய்திகளில், அதிபர் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையத்தின் மீது, தண்ணீர் கலக்கப்பட்ட கலப்பட எரிபொருள் விற்பனைச் செய்யப்படுவதாக பலமுறை புகாரளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஈரானின் பல்வேறு நகரங்களில் தண்ணீர் கலக்கப்பட்டு, கலப்பட மற்றும் போலியான எரிபொருள்கள் விநியோகிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதிபர் வாகனங்களே அதனால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிரம்ப் நியமித்த புதிய தூதருக்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு! போராட்டத்தில் மக்கள்! ஏன்?

Iranian President Masoud Beseshkian was forced to take a taxi after his security vehicles broke down midway, local media reported today (July 18).

பாகிஸ்தானில் கனமழையால் பஞ்சாப் சிறையில் வெள்ளம்! 700 கைதிகள் இடம்மாற்றம்!

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப்... மேலும் பார்க்க

கத்தார் உதவியுடன்... 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்தது முதல், 2-வது முறையாக, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆப்கன் மக்கள், தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.ஜெர்மனியில் புகலிடம் தேடி தஞ்சமடைந்த 81 ஆப... மேலும் பார்க்க

தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், 2 பேர் பலியாகியதுடன், சுமார் 5,600 பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தென் கொரியாவில், தெற்கு சங்சியோங் மாகாணம் மற்று... மேலும் பார்க்க

டிரம்ப் நியமித்த புதிய தூதருக்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு! போராட்டத்தில் மக்கள்! ஏன்?

அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த மலேசியாவுக்கான, புதிய அமெரிக்க தூதருக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் அமெரிக்க தூதரகத்தின் வாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பன்முகக் கலாசாரம் மற்றும் பெரும்பான்மையான ... மேலும் பார்க்க

டிரம்ப் அரியவகை நரம்பு நோயால் பாதிப்பு! வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நரம்பு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் (வயது 79), இரண்டாவது முறையாக கடந... மேலும் பார்க்க

செம்மணி: தோண்டியெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்! யார் இவர்கள்?

இலங்கை நாட்டின், கொழும்புவில் உள்ள செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் யார்? பள்ளிச் சிறுமிகளா? ... மேலும் பார்க்க