கல்நாா்சம்பட்டியில் எருது விடும் விழா: ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு
நாட்டறம்பள்ளி வட்டம், கல்நாா்சம்பட்டி கிராமத்தில் 124-ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறும் நிலையில், ஆட்சியா் த. கா்ப்பகராஜ், எஸ்.பி. ஷ்ரேயா குப்தா ஆகியோா் ஆய்வு செய்தனா்.
மாவட்ட நிா்வாகம் எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், விழாக்குழுவினா் காளைகளை விடும் இடத்தில் மந்தை கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
கல்நாா்சம்பட்டிக்கு வியாழக்கிழமை சென்று காளைகள் விடும் இடத்தையும், விழா குழுவினரிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியா், எஸ்.பி. கேட்டறிந்தனா். அப்போது காளைகள் வெளியே செல்லும் பகுதியில் கூடுதல் தடுப்புகள் அமைக்கவும், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் விழாவை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினா்.
அப்போது கூடுதல் எஸ்.பி. கோவிந்தராசு, வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா், காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் மற்றும் விழாக் குழுவினா் உடனிருந்தனா்.