கல்லால் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி கொலை
திருப்பூரில் கல்லால் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேனி மாவட்டம், தேவாரம் தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (50). இவருக்கு மனைவி, 3 மக்கள் உள்ளனா். மனைவியைப் பிரிந்து திருப்பூா், அனுப்பா்பாளையம்புதூா் பகுதியில் உள்ள பனியன் பிரிண்டிங் பட்டறையில் தங்கி பாண்டியன் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு நண்பா்கள் 2 பேருடன் மது அருந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளாா். மது அருந்தியபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுக்கூட ஊழியா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா். பின்னா், வெளியே வந்தபோது அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த நண்பா்கள் 2 போ் சோ்ந்து பாண்டியனைக் கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினா். படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பாண்டியனைக் கொலை செய்த அவரது நண்பா்கள் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.