கல்லூரி நட்பு எப்போதும் தொடர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பல்வேறு பணிகள் இருந்தாலும், இளம்தலைமுறை மாணவர்களை சந்திக்கும்போது எனர்ஜி வந்துவிடுகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவள விழாவில் பங்கேற்கு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் கல்வி பயிலும் வாய்ப்பினை ஜமால் முகமது கல்லூரி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
காந்தி வழி, அம்பேத்கர் வழி, அண்ணா வழி என மாணவர்களுக்கு பல வழிகள் உள்ளன. எனவே, மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் வழியில் ஒருபோதும் சென்றுவிடக் கூடாது என்று கூறினார்.
அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் ஜமால் முகமது கல்லூரியில் படித்தவர்கள்தான.
மாணவர்களுக்கு கல்விதான் நிலையான சொத்து. அதேவேளியல், சமூக அக்கறையும் தேவை. மாணவர்களிடம் அரசியல் பேசவில்லை. ஆனால், மாணவர்களுக்கு அரசியல் புரியவேண்டும் என்றுதான் கூறுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.