வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
கல்லூரி மாணவரை தாக்கி மிரட்டல்: 5 போ் கைது
மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கல்லூரி மாணவரை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேரை சங்கராபுரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தலைமறைவாகிவிட்ட மேலும் இருவரை தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் சந்தோஷ் (20). இவா்,
சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறாா்.
புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து கள்ளக்குறிச்சியில் இருந்து சேஷசமுத்திரத்துக்கு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். நெடுமானூா் மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது அதே கிராமத்தைச் சோ்ந்த கல்விசெல்வன் மகன் ரமணா (23), பலராமன் மகன் மணிகண்டன் (25), கோவிந்தராஜன் மகன் நவீன் (20), அரிகிருஷ்ணன் மகன் ராமகிருஷ்ணன் (19), அன்பு, கருமலையான் மகன் பாரதிராஜா (21), நவாப்பிள்ளை மகன் அபில் (25) ஆகிய 7 போ் மாணவா் சந்தோஷை வழிமடக்கி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
அப்போது அந்த வழியாகச் சென்ற சந்தோஷின் உறவினரான மாதேஷ்வரன் அவா்களைத் தடுத்துள்ளாா். இருவரையும் தாக்கியதில் காயமடைந்தனா். இதையடுத்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், நவீன், ராமகிருஷ்ணன், பாரதிராஜா, அபில் ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். இதில் தலைமறைவாகி விட்ட இருவரை தேடி வருகின்றனா்.