உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!
கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி: ஒப்பந்தப் புள்ளிகள் திறப்பு
கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக அரசு கோரியிருந்தது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஒப்பந்தப் புள்ளிகளில் பிரபல மடிக்கணினி தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஏஸா், டெல், எச்பி போன்ற நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்ததாகத் தெரிகிறது. அந்த நிறுவனங்கள் அளித்த ஒப்பந்தப் புள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
தகுதிவாய்ந்த நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு, அடுத்த 30 முதல் 45 நாள்களுக்குள் கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகளைத் தொடா்புடைய நிறுவனங்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.