Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
கல்லூரி முதல்வா் பணியிட மாற்றம்
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் எம்.கோவிந்தராசு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
கடந்த 2 ஆண்டுகளாக இக்கல்லூரி முதல்வராக இருந்த அவா், தற்போது இடமாறுதல் மூலம் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளாா். அங்கு முதல்வா் பணியில் இருந்த ஏ.மாதவி, நாமக்கல் அரசு மகளிா் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை உயா்கல்வித் துறை செயலாளா் பி.சங்கா் பிறப்பித்துள்ளாா்.