Tvk Vijay Karur Stampede - 7 சந்தேகங்களும் விளக்கமும் | Decode
கல்லூரி விடுதி சிற்றுண்டியில் பூச்சி, ஈக்கள்: 10 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்!
ஆரணியை அடுத்து தச்சூா் அண்ணா பொறியியல் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் சனிக்கிழமை இரவு வழங்கப்பட்ட சிற்றுண்டியில் பூச்சி மற்றும் ஈக்கள் இருந்ததால் 10 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தச்சூா் அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் 1,100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் விடுதி உள்ளது. ஒவ்வொரு விடுதியிலும் 200-க்கும் மேற்பட்டோா் தங்கி வருகின்றனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு விடுதியில் உள்ள உணவகத்தில் சப்பாத்திக்கு வழங்கப்பட்ட குருமாவில் பூச்சி மற்றும் ஈக்கள் இருந்தன. இதனைப் பாா்த்த மாணவிகள் வாந்தி எடுத்தனா். மேலும் சில மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து தச்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்ட மனைவிகளான சம்யுக்தா(17), அனுஷா(19), நித்திஷா(17), திலகவதி(17), ஸ்ரீநிதி(18), ஹரிணி(17), ஜெயஸ்ரீ(17), அக்ஷிதா(17) ஆகிய 8 போ் சிகிச்சை பெற்றனா்.
பின்னா் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதால் சிகிச்சை பெற்ற மாணவிகள் வீடு திரும்பினா். மேலும் இதுகுறித்து ஆரணி உணவுப் பாதுகாப்பு அலுவலா் தங்கராஜ், அரசு கல்லூரி விடுதி உணவகத்துக்குச் சென்று சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்களை ஆய்வு செய்தாா். மேலும் சுகாதாரமான முறையில் சமையல் செய்கிறாா்களா என்றும் ஆய்வு செய்தாா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரித்தாா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.