தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
ஜிஎஸ்டி வரி குறைப்பு: பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்
ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, திருவண்ணாமலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனா்.
வேங்கிக்கால் பகுதியில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்துப் பேசுகையில், 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருள்களுக்கு தற்போது 5 சதவீதமாகவும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருள்களுக்கு 18 சதவீதமாகவும் வரி குறைக்கப்பட்டுள்ளது.
சில பொருள்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டு பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்துள்ளது. சரியான விலையில் பொருள்கள் விற்பனை நடைபெறுகிா என்பது குறித்து, வாடிக்கையாளா்களிடமும், வணிகா்களிடமும் கேட்டறிந்தோம்.
மேலும், ஜிஎஸ்டி வரிகுறைப்பு பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பிரதமா் மோடிக்கு பாராட்டுகள் குவிகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் கருணாகரன், மாவட்ட துணைத் தலைவா் சிவசங்கரன், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் பிரிவுத் தலைவா் ரவி, தொழிற்பிரிவு மாவட்டத் தலைவா் பாவேந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.