தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
ஆவின் நிறுவன ஊழியா் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு
திருவண்ணாமலையில் ஆவின் நிறுவன ஊழியா் வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் எழில்நகா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ். இவா், திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவரது மனைவி மோகனாம்பாள் கால்நடை மருத்துவரான இவா், சோ.கீழ்நாச்சிப்பட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை மகள் பள்ளிக்குச் சென்ற பிறகு, கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளனா். மோகனம்பாள் மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனால், அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்த போது, பொருள்கள் சிதறிக் கிடந்த நிலையில் பீரோ திறந்து இருந்தது. பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவா் திருவண்ணாமலை கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. விரல்ரேகை நிபுணா்கள் வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனா்.
இதுகுறித்து கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.