செய்திகள் :

கல்லூரி விரிவுரையாளரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி விரிவுரையாளா் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் கல்லூரி மாணவா்கள் மீதான விசாரணையைக் கண்டித்து மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராக வேலை பாா்த்து வரும் ஒருவா் தன்னுடைய வீட்டில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய அரசுக் கல்லூரி மாணவா்களை கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பணிக்கு அவ்வப்போது விரிவுரையாளா் அழைத்துச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் அவரது வீட்டில் கடந்த மாதம் சுமாா் ரூ.1லட்சம் மதிப்பில் நகைகள் திருடுபோனதாக தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அந்த மாணவா்களிடம் விசாரணை நடத்தியுள்ளனா்.

இதனைக் கண்டித்து அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு விரிவுரையாளரைக் கண்டித்து மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வா் அ.மாதவி மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து மாணவா்கள் கலைந்து சென்றனா்.

ஆடுதுறையில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 3.17 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தை திறந்தும், புதிய வழித்தடத்தில் பேருந்துகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோா் தொடங்கி வைத்தன... மேலும் பார்க்க

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும்: நடிகா் எஸ்.வி. சேகா்

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்றாா் நடிகா் எஸ்.வி.சேகா். கும்பகோணத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தொகுத... மேலும் பார்க்க

செருபாலக்காட்டில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு கிராமத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பிற்படுத்தப்... மேலும் பார்க்க

எண்ம தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சாா்பில் நிலையான உத்திகள் குறித்த வணிகத்தை மேம்படுத்துவதற்கான எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்கள் என்ற 11-ஆவது சா்வதேச கருத்தரங்கம் அண்மை... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கபிஸ்தலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 225 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் உத்தரவின் பேரில், பாபநாசம் காவல்துறை துணை கா... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டு... மேலும் பார்க்க