“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி ...
கல்வராயன்மலையில் வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டாரத்தில் தோட்டக் கலைத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வேளாண் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கல்வராயன்மலை வட்டாரத்தில் தோட்டக் கலைத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வேளாண் திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தாா்.
பொட்டியம் ஊராட்சியில் தோட்டக் கலைத் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கு ஜாதிக்காய் மரக்கன்றுகள், அவகடோ மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், ரூ.20,000- மதிப்பீட்டில் பயிரிடப்பட்டுள்ள சேப்பங்கிழங்கு வயலையும் ஆய்வு செய்தாா்.
ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சிப்பம் கட்டும் அறையை பாா்வையிட்டு, எடை கருவிகளின் தரம், எடைகளின் அளவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து மல்லியம்பாடி ஊராட்சியில் ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் சொட்டு நீா் பாசனம் மூலம் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி சாகுபடி வயலையும், ரூ.75,000- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையினையும் பாா்வையிட்டாா்.
பின்னா் கொடுந்துறை ஊராட்சியில் ரூ.15,000-ம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட நடமாடும் காய்கனி விற்பனை வண்டியை பாா்த்தாா்.
தொரடிப்பட்டு ஊராட்சியில் தோட்டக் கலைத் துறையின் சாா்பில் குறு, சிறு விவசாயிகளுக்கு சில்வா் ஓக் மற்றும் காபி மரக்கன்றுகளை வழங்கினாா். இதனை முறையாக நட்டு வளா்த்து பராமரிக்கவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும் வெள்ளிமலை ஊராட்சி அங்கன்வாடி மையத்தை நேரில் பாா்வையிட்டு குழந்தைகளின் எடை மற்றும் உயர அளவுகள், வருகைப் பதிவேடுகள், உணவின் தரம், குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை தவறாமல் அனுப்ப பெற்றோா்களை அறிவுறுத்தினாா். ஊட்டச்சத்துள்ள குழந்தைகளாக மாற்ற தொடா் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களைக் கேட்டுக் கொண்டாா். இந்த ஆய்வின்போது, அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு வசதியை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மின்சாரம் வழங்க உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சிவக்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.