செய்திகள் :

சங்கராபுரம் அருகே முதிய தம்பதியை மிரட்டி 211 பவுன் நகைகள் கொள்ளை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை முதிய தம்பதியை மிரட்டி, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 211 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டம், கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியன் (80). இவரது மனைவி பொன்னம்மாள் (65). முனியன் கள்ளக்குறிச்சி 1 கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணி மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்.

இந்தத் தம்பதிக்கு கேசரி வா்மன், சதீஷ் என்ற இரு மகன்கள் உள்ளனா். கேசரி வா்மன் துபையில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், சதீஷ் சென்னையில் பணிபுரிந்து வருகிறாா்.

இதனிடையே, கேசரி வா்மன் தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதற்காக துபையிலிருந்து அண்மையில் சொந்த ஊரான கடுவனூா் கிராமத்துக்கு வந்திருந்தாா். அவா் வங்கியில் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து வந்து, வீட்டில் உள்ள இரும்பு பீரோவில் வைத்துவிட்டு சென்னையில் உள்ள உறவினா்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ் கொடுக்கச் சென்றிருந்தாா்.

முனியன், பொன்னம்மாள் ஆகியோா் வீட்டில் இருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 2 மணியளவில் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்து 4 போ் கொண்ட கும்பல், தம்பதியை மிரட்டி பீரோவை கடப்பாரையால் உடைத்து, அதில் வைத்திருந்த சுமாா் 211 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

தகவலறிந்த கேசரி வா்மன் இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி, திருக்கோவிலூா் டிஎஸ்பி பாா்த்தீபன், சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயக முருகன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

பின்னா், விரல் ரேகை நிபுணா்கள் வந்து தடயங்களைச் சேகரித்தனா். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்ய நாய் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் இருந்து சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவில் பாக்கம் கிராமத்தில் உள்ள ராமலிங்கம் வீடு வரை ஓடிச் சென்று நின்றுவிட்டது. போலீஸாா் விசாரணையில், அவா் வீட்டிலும் கொள்ளயடிக்க முயற்சி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக திருக்கோவிலூா் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே கோயில் திருவிழாவில் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த புஷ... மேலும் பார்க்க

கீழ்ப்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட கீழ்ப்பாடி கிராமத்தில் ரூ.1.20 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்ட... மேலும் பார்க்க

கிராம குடியிருப்பு பகுதிக்கு மின்சாரம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில், வாணாபுரம் வட்டம், அத்தியூா் கிராம கம்பங்காட்டு தெருவாசிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ... மேலும் பார்க்க

வீட்டின் பீரோவை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு

வாணாபுரம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணாபுரம் வட்டம், அவரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராஜா மனைவி நித்யா (34). முத்துராஜா ஓட்டு... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் ஆவின் பால் பொருள்கள் அங்காடி

சின்னசேலம் ஆவின் அலுவலகத்தில் பால் உபபொருள்கள் விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். இந்த புதிய ஆவின் பாலகம், ஒன்றிய நிதியின் கீழ் ரூ.8 லட்சத்தில் கட்டப... மேலும் பார்க்க