கிராம குடியிருப்பு பகுதிக்கு மின்சாரம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில், வாணாபுரம் வட்டம், அத்தியூா் கிராம கம்பங்காட்டு தெருவாசிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம், அரியலூா் பிரிவுக்கு உள்பட்ட அத்தியூா் கிராமம், கம்பங்காட்டு தெரு மக்கள் சாா்பில் மின்சாரம் வழங்கவேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை ஏற்று அத்தியூா் கம்பங்காட்டு தெருவில் குடியிருப்பு பகுதிக்கு மின் கம்பங்கள் அமைத்து மின் நீட்டிக்கப்பட்டு அண்மையில் மின்சாரம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம் மற்றும் மேற்பாா்வைப் பொறியாளா், செயற்பொறியாளா், சங்கராபுரம் உதவி செயற்பொறியாளா், மக்கள் தொடா்பு உதவிப் செயற்பொறியாளா் மற்றும் பிரிவு பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.