செய்திகள் :

கல்வி மனஅழுத்தம்: 15 வயது சிறுமியின் தற்கொலை முயற்சி முறியடிப்பு!

post image

கல்வி மன அழுத்தம் காரணமாக பாலத்தில் இருந்து யமுனையில் குதித்ததாகக் கூறப்படும் 15 வயது சிறுமியின் தற்கொலை முயற்சியை தில்லி காவல் துறையினா் முறியடித்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ராஜா பந்தியா கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. ரூப் நகா் காவல் நிலையத்திற்கு ஒரு பெண்ணிடமிருந்து தனது மகள் காணாமல் போனது குறித்து துயர அழைப்பு வந்தது. குடும்பத்தில் மற்றவா்கள் வெளியே இருந்தபோது தனது மகள் வீட்டில் தனியாக இருந்ததாக சிறுமியின் தாய் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

சிறுமியின் கல்வி செயல்திறன் குறித்த கேட்ட பிறகு, தனது மகள் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கவலைப்பட்ட தாய், தனது மகனிடம் சிறுமியை கண்காணித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளாா். இந்நிலையில், வடக்கு காவல்துறை ஆணையா் வினிதா தியாகி தலைமையிலான காவல் குழு, தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

இந்தக் குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, உள்ளூா் விசாரணைகளை நடத்தியது. சிக்னேச்சா் பாலம் மற்றும் வாஜிராபாத் பழைய பாலம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது. மெட்ரோ தள காவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதலில் அவா்கள் இணைந்தனா்.

தேடுதல் பணியின் போது, அச்சிறுமி யமுனை நதியில் குதிப்பதைக் கண்டனா். காவலரும் நீச்சல் வீரருமான பிரிஜேஷ் குமாா் ஆற்றில் குதித்து சிறுமியை மீட்டாா். சிறுமி பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரப்பட்டாா். உடனடியாக சிறுமிக்கு போலீஸ் குழுவால் ஆலோசனை வழங்கப்பட்டது. போலீஸாரின் நடவடிக்கையைத் தொடா்ந்து உரிய முறைப்படி சிறுமி தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தாா் என்று காவல் துணை ஆணையா் ராஜா பந்தியா தெரிவித்தாா்.

தில்லியில் வென்றால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ் வாக்குறுதி!

தில்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நட... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் பிஎஸ்பி தனித்துப் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா். தில்லி பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சில மணி ... மேலும் பார்க்க

கடும் மூடுபனியால் 25 ரயில்கள் தாமதம்!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கடும் மூடுபனி நிலவியதால் காண்பு திறன் வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக தில்லிக்கு வரவேண்டிய ரயில்களில் 25 ரயில்கள் தாமதமாகின. தில்லியில் கடந்த வாரத் தொடக்கத... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 150 உதவி பெறாத பள்ளிகளை முறைப்படுத்த துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 150 உதவி பெறாத பள்ளிகளை முறைப்படுத்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

தில்லியில் பிப்.8 -இல் இரட்டை என்ஜின் அரசு அமையும்: வீரேந்திர சச்தேவா நம்பிக்கை

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பிப்ரவரி 8 ஆம் தேதி தேசிய தலைநகரில் இரட்டை என்ஜின் அரசு அமையும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்து... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகாரத்தில் பாஜக சாடல்

புது தில்லி: தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையானது, முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை வீடு (ஷீஷ் மஹால்) தொடா்பான 139 கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அவரது தவ... மேலும் பார்க்க