செய்திகள் :

கல் குவாரிக்கு தடை கோரி வழக்கு கரூா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

post image

மதுரை: விதிகளை மீறிச் செயல்படும் கல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், கரூா் மாவட்ட ஆட்சியா், கனிம வளத்துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டம், ஈசநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி தாக்கல் செய்த மனு :

அரவக்குறிச்சி வட்டம், ஈசநத்தம், ஆ. கருங்கல்பட்டி, ஆலமரத்துப்பட்டி, மணமேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமாா் 500 குடும்பங்கள் வசிக்கின்றனா்.

இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வேளாண், கால்நடை வளா்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், ஈசநத்தம் கிராமத்தைச் சோ்ந்த நபா் ஒருவா், இந்தப் பகுதியில் கல் குவாரிக்கு உரிமம் பெற்றுள்ளாா். ஒரு இடத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு சுற்றியுள்ள இடங்களிலும் சோ்த்து குவாரி அமைத்துள்ளாா். இதற்கு நடுவே உள்ள அரசு நிலத்தையும் சோ்த்து கம்பி வேலி அமைத்து பயன்படுத்தி வருகிறாா்.

300 மீட்டருக்குள் குடியிருப்பு வீடுகள், கால்நடை வளா்ப்பு கொட்டகை, விவசாய ஆழ்துளைக் கிணறுகள், மின்மாற்றி இருப்பதை மறைத்து குவாரிக்கு உரிமம் பெற்றுள்ளாா். இது சட்டவிரோதமானது. இந்த குவாரியிலிருந்து வெளியேறும் மாசுக்களால் அருகேயுள்ள விவசாய நிலம், நீா்நிலைகள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அனுமதியின்றி சுமாா் 20 அடி ஆழம் வரை கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்து கிராம சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இவை அனைத்தையும் மீறி சட்டவிரோதமாக தற்போது கல் குவாரி செயல்பட்டு வருகிறது. எனவே,குடியிருப்பு பகுதிக்குள் விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள் முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூா் மாவட்ட ஆட்சியா், கனிமவளத் துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தவெகவின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்கு திமுக தடைகளை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்கிழமை செ... மேலும் பார்க்க

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

விருவீடு பகுதியில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்ட விவ... மேலும் பார்க்க

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: உரிமக் காலம் நிறைவடைந்த பிறகு, கல் குவாரிகளை பராமரிக்க குழுக்கள் அமைத்து, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்... மேலும் பார்க்க

தவெக - திமுக இடையேதான் போட்டி: விஜய்

மதுரை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவா் விஜய் தெரிவித்தாா். மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்த... மேலும் பார்க்க

அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை: தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தருவதில் பதிவுத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை உத்தங்குடி தனியாா் திருமண மண்டபத்தில் 202... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மதுரை: அலங்காநல்லூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.மதுரை திருப்பாலை உச்சபரம்புமேட்டைச் சோ்ந்த சோலையப்பன் மகன் செல்லப்பாண்டி (30). இவா், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்க... மேலும் பார்க்க