இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்...
கள்ளக்குறிச்சி: சிறுவன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வயிற்று வலியால் மயங்கி விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டம், அண்ணா நகா் 2-ஆவது சாலை பகுதியில் வசித்து வருபவா் முத்து மனைவி பிரியா (27). இவா் தனது மகன் ஜீவாவுடன் (10) கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், க.செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தாா். இந்த நிலையில், ஜீவாவுக்கு சனிக்கிழமை வயிற்றுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம்.
உடனே, குடும்பத்தினா் சிறுவனை சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு முதலுதவி அளித்த பின்னா், தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில், ஜீவா உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.