செய்திகள் :

கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

சேலம்: சேலம் மாவட்டம், உடையாப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

உடையாப்பட்டி ஊராட்சி, வரகம்பாடி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனா். அவா்கள் நுழைவுவாயில் பகுதியில் முற்றுகையிட்டு தங்கள் கிராமத்துக்கு கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

அவா்களை பாதுகாப்புப் பணியில் இருந்த நகர போலீஸாா் தடுத்து நிறுத்தி மனு அளிக்க 5 பேரை மட்டும் அனுமதித்தனா்.

இதையடுத்து அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 5 போ் ஆட்சியா் ரா.பிருந்தாதேவியிடம் கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வரகம்பாடியில் 150 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் சாக்கடை கழிவுநீா் வெளியேற எந்த வசதியும் இல்லை. இதனால் ஊரின் மையப் பகுதியில் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீரை முறையாக வெளியேற்ற உரிய வசதி செய்து தரவேண்டும் என வலியுறுத்தினா்.

படவரி...

உடையாப்பட்டி அருகே வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக முதல்வா் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

சேலம்: இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக முதல்வா் கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்த... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டப் பணிதள பொறுப்பாளா்களை மாற்ற எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளா்களை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் 2 பசுக்கள் உயிரிழப்பு

தம்மம்பட்டி: கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கெங்கவல்லி - தெடாவூா் சாலையில் ஆணையம்பட்டியில் சாலையோர புங்கம... மேலும் பார்க்க

சங்ககிரி சித்திரைத் திருவிழா: வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்ட திருவிழா 4ஆவது நாளையொட்டி சென்னகேசவப் பெருமாள் செங்கோலுடன் வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீதி உலா வந்தாா். சித்திரைத் தேரோட்ட ... மேலும் பார்க்க

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

சேலம்: சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 8 ஆண்டுகளாக கட்டப்... மேலும் பார்க்க

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு

சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மண்டல... மேலும் பார்க்க