மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழப்பு: ஆா்டிஐ தகவல்
கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன்(90) வயது மூப்பின் காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார். 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா...', நான் உங்கள் வீட்டு பிள்ளை உள்ளிட்ட புகழ்பெற்ற பாடல்களுக்கு சொந்தக்காரர்.
பாடல்கள் எழுதுவது மட்டுமல்லாது நாட்டிய நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வானொலி நிகழ்ச்சிகள் என பல்வேறு துறைகளிலும் முத்திரைப் பதித்துள்ளார். மேலும் திரைபடங்களுக்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.
ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்
'முருகவேல் காந்தி' என்கிற தனது பெயரை சேரன் செங்குட்டுவன் நாடகத்தைப் பார்த்து செங்குட்டுவன் எனவும் அதோடு ஊரின் பெயரையும் முன்னால் இணைத்து தனது பெயரை பூவை செங்குட்டுவன் எனவும் மாற்றிக் கொண்டார்.
இவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சென்னை, பெரம்பூர், ரமணா நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.