செய்திகள் :

கவுன்சிலர்கள் பதவிநீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

post image

சென்னை: சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 189 -ஆவது வார்டு கவுன்சிலர் பாபு, 5 -ஆவது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40 -ஆவது வார்டு கவுன்சிலரும், மண்டல குழு தலைவருமான ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11 -ஆவது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, பதவி நீக்கம் செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி என். மாலா விசாரித்தார். விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், பதவி நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு விரிவான பதில் அளிக்கப்பட்டது. அவற்றை பரிசீலிக்கவில்லை. மேலும் தங்களது தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், இவர்களை பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கான காரணங்களை விளக்கி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நோட்டீஸ்களுக்கு கவுன்சிலர்கள் அளித்த பதிலை, எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு நிராகரித்துள்ளது. விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை எனக் கூறி, இவர்கள் நான்கு பேரையும் பதவி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், அவர்களின் பதிலை பரிசீலித்து, விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, சட்டப்படி நான்கு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The High Court quashed the order to dismiss councilors

இதையும் படிக்க : பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் நியமனத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

இரவில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள... மேலும் பார்க்க

பிரதமர் மோடி ‘விஸ்வகுரு’ என்றால் ட்ரம்ப்புடன் பேசி தீர்வு காணலாமே! -முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (செப். 2) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு திமுக அரசால் துரோகம்: எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை மதுரை மேலூரில் இன்று எட... மேலும் பார்க்க

பெண் அதிகாரியுடன் வாக்குவாதம்? உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்தக் கூறிய இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு அனுமதி!

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. பணிநிரந்தரம் கோரி கடந்த மாதம் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியா... மேலும் பார்க்க

திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொ... மேலும் பார்க்க