பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
காங்கயத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 1,447 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், கொப்பரை கிலோ அதிகபட்சமாக ரூ.222-க்கும், குறைந்தபட்சமாக ரூ.162-க்கும், சராசரியாக ரூ.221-க்கும் ஏலம்போனது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3 லட்சத்து 20 ஆயிரம்.
ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.