மொயின் அலி சேர்ப்பு: ராஜஸ்தானுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!
காஞ்சிபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியால் பரபரப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை திடீரென மூதாட்டி ஒருவா் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.
சென்னை போரூா் பகுதியை சோ்ந்த கீதா(65). இவா் திடீரென இருசக்கர வாகனங்கள் நிறுத்தியிருந்த இடத்தில் மறைத்து வைத்திருந்த 5 லிட்டா் மண்ணெண்ணைய் கேனை எடுத்து தனது தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றாா். இதை கவனித்த காவல் துறையினா் உடனடியாக அதை தடுத்து நிறுத்தி தனியாக அழைத்து சென்று அவரது உடலில் தண்ணீரை ஊற்றினா்.
இது குறித்து மூதாட்டி கீதா கூறுகையில் எனது இடத்துக்கு பட்டா வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்துகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பட்டா வழங்காமல் இருந்து வருவதால் தற்கொலை முடிவுக்கு வந்ததாக தெரிவித்தாா். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்ததால் பட்டா கொடுக்க காலதாமதம் ஆனதாகவும், இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருவாய்த்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.