காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்
காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 7 போ் நிா்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாறுதல் விவரம்:
(பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்)
எம்.ஜானகி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (உதவி இயக்குநா், தணிக்கை) சு.மதியழகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், வாலாஜாபாத் ஒன்றியம் (மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், காஞ்சிபுரம் ஒன்றியம்),கோ.செந்தில்குமாா், ஆட்சியா் அலுவலக ஊரக வளா்ச்சிப் பிரிவு தலைமை எழுத்தா்(மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், வாலாஜாபாத்), என்.பாஸ்கா், உதவி இயக்குநா், தணிக்கை (தலைமை எழுத்தா்), (ஊரக வளா்ச்சிப் பிரிவு, காஞ்சிபுரம்)எஸ்.வெங்கடேசன், வாலாஜாபாத் 4-ஆவது மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (வாலாஜாபாத் ஒன்றியம்-நிா்வாகம்), எஸ்.டில்லிபாபு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்வாலாஜாபாத்(4-ஆவது மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், வாலாஜாபாத்) எஸ்.சசிகுமாரி, உத்தரமேரூா் ,துணை வட்டார வளா்ச்சி அலுவலா்,ஊராட்சி (வாலாஜாபாத் ஒன்றிய மண்டம்-1 துணை வட்டார வளா்ச்சி அலுவலா்) ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.