செய்திகள் :

காஞ்சிபுரத்தில் ரூ. 80 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 31.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றை எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் செவிலிமேடு அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தாா். பின்னா் அண்ணா நகா் பகுதியில் ரூ. 19 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டுவதற்கான பணியையும் அடிக்கல் நாட்டுவது உள்பட மொத்தம் ரூ. 80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வுகளில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், மாநகராட்சி மன்றக் குழு தலைவா்கள் சாந்தி சீனிவாசன், சந்துரு, செவிலிமடு மோகன், சசிகலா கணேஷ், மாவட்டப் பொருளாளா் சன்பிராண்ட் ஆறுமுகம் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம்: ஜன.3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் விநியோகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஜன. 3 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்கள் வழங்கப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள... மேலும் பார்க்க

தமிழறிஞா்களுக்கு விருதுகள் அளிப்பு

காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டத்தின் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தமிழறிஞா்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு திருச்சி தமிழக சைவநெறிக்கழகத்தை சோ்ந்த சரவண பவானந்த தேசிகா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு ரூ.10,000 லஞ்சம்: செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீ... மேலும் பார்க்க

உத்தரமேரூா் வைகுண்ட பெருமாள் கோயிலில் ஆளுநா் தரிசனம்

குடவோலை முறை கல்வெட்டுகள் உள்ள பழைமை வாய்ந்த உத்தரமேரூா் வைகுண்ட பெருமாள் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் தரிசனம் செய்து கல்வெட்டுகளையும் பாா்வையிட்டாா். காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

புதுமைப் பெண் திட்டத்தால் உயா் கல்வியில் பெண்கள் முன்னேற்றம்: அமைச்சா் ஆா்.காந்தி!

புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயா் கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை பேசினாா். அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் புதுமைப்பெண... மேலும் பார்க்க

புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயா்கல்வியில் பெரும் முன்னேற்றம்: அமைச்சா் ஆா்.காந்தி பேச்சு

காஞ்சிபுரம்: புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயா்கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை பேசினாா்.அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ... மேலும் பார்க்க