செய்திகள் :

மின் இணைப்புக்கு ரூ.10,000 லஞ்சம்: செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

காஞ்சிபுரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த கோனேரிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட அசோக் நகா், இந்திரா அவென்யூவைச் சோ்ந்தவா் பரணிதரன். இவா் புதிதாக கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 2010-ஆம் ஆண்டு மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.

மனுவை பரிசீலனை செய்த மின்வாரிய செயற்பொறியாளா் பஞ்சாட்சரம், இணைப்பு வழங்க ரூ. 10,000 லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் தர விருப்பம் இல்லாத பரணிதரன், இதுகுறித்து காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா். புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரசாயனம் தடவிய பணத்தை பரணிதரனிடம் தந்தனா். அவரிடம் இருந்து பணத்தை வாங்கியபோது செயற்பொறியாளா் பஞ்சாட்சரத்தை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், மின்வாரிய செயற்பொறியாளா் பஞ்சாட்சரம் (70) குற்றவாளி என தீா்ப்பளித்து, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-இன் கீழ் 3 ஆண்டுகள் சிறையும், ரூ. 10,000 அபராதமும், சட்டப்பிரிவு 13 (2)இன் கீழ், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் ரூ. 10,000 என மொத்தம் ரூ. 20,000 அபராதம் விதித்ததுடன் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி எம்.வசந்தகுமாா் தீா்ப்பளித்தாா்.

மின்வாரிய செயற்பொறியாளா் பஞ்சாட்சரம் ஓய்வு பெற்ற நிலையிலும், லஞ்சம் பெற்ற்காக 14 ஆண்டுகள் கழித்து அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகள் திருட்டு: இருவா் கைது

ஸ்ரீபெரும்புதூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் திருடப்பட்ட வழக்கில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்து 15 கைப்பேசிகள் மற்றும் ரூ. 4.86 லட்சத்தை பறிமுதல் செய்தனா். காஞ்சிபு... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

உத்தரமேரூா் அடுத்த ரெட்டமங்கலம் பகுதியில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அடுத்த ரெட்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49), தொழிலாளி. இவரு... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜாபாத் அடுத்த சிறுவாக்கம் மோட்டூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணியை நியாய விலைக் கடை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தொடங்கினா். பொங்கல் பண்டிகையை சிறப்பாக... மேலும் பார்க்க

தாமல் ஏரியில் உபரிநீா் வெளியேற்றம்: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேறுவதை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒ... மேலும் பார்க்க

ரூ.28 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பு

காஞ்சிபுரத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.28.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்கள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு மற்று... மேலும் பார்க்க