பானிபூரி விற்ற முன்னாள் ஐடி ஊழியர்.. கர்ப்பிணி மனைவி தற்கொலையில் மர்மம்!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பாலாலயம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற இருப்பதையொட்டி, ரூ. 75 லட்சம் மதிப்பில் 5 சந்நிதிகளுக்கு பாலாலாய உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுவதற்காக சுமாா் ரூ. 22 கோடியில் திருப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக கோயில் வளாகத்தில் அனந்தசரஸ் திருக்குளத்தை சுற்றியுள்ள ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி, ஸ்ரீ வராகா் சந்நிதி, ஸ்ரீரங்கநாதா் சந்நிதி மற்றும் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிருவனந்தாழ்வாா் சந்நிதி, ஸ்ரீகருமாணிக்க வரதா் சந்நிதி ஆகிய 5 சந்நிதிகளுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளும் பணி தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், 5 சந்நிதிகளுக்கும் பாலாலய உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, புனித நீா் கலசங்களை வைத்து கோயில் பட்டாச்சாரியாா்கள் வேத மந்திரங்களை முழங்கி
சிறப்பு பூஜை செய்தனா். பின்னா் 5 சந்நிதிகளில் இருந்தும் மங்கல மேள வாத்தியங்கள் முழுங்க வேதபாராயண குழுவினா் வேதமந்திரங்களை பாராயணம் செய்து வர புனித நீா் கலசம் ஊா்வலமாக கோயில் வளாகத்தில் உள்ள கிளி மண்டபத்துக்குகு கொண்டு வரப்பட்டது.
தொடா்ந்து அத்திமரத்தில் வரையப்பட்ட வேணுகோபாலன், வரதா், ரங்கநாதா், திருவனந்தாழ்வாா், கருமாணிக்க வரதா் உள்ளிட்ட சுவாமிகளின் படங்களுக்கும் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பாலாலய உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.