செய்திகள் :

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜசுவாமி கோயில் தேர்த் திருவிழா

post image

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜசுவாமி கோயில். இக்கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்மாதம் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-வது நாள் நிகழ்ச்சியாக தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் வரதராஜசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி, அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் உற்சவர் வரதராஜசுவாமி ஆலயத்திலிருந்து கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ராஜநடையுடன் தேருக்கு எழுந்தருளினார். இதன்பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தேரோட்டத்தையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு கருதி நகரில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகள், கழிப்பறை வசதிகள் ஆகியனவும் செய்யப்பட்டிருந்தன. நகரில் உயர் கோபுரங்கள் அமைத்தும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழாவின்போது காலையில் தேர் புறப்படுவதற்கு முன்பாக பக்தர்கள் தேரில் ஏறி சுவாமியை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி தேர் மாலையில் நிலைக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் தேரில் ஏறிச் சென்று சுவாமியை தரிசிக்க காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.

தேர் வரும் வழிநெடுகிலும் வணிக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் பலரும் அன்னதானம், மோர், இனிப்பு வழங்கினார்கள். தேரோட்டத்தையொட்டி நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தேர்த்திருவிழாவில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஆட்சியர் (பயிற்சி) ந.மிருணாளினி, அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, அறநிலையத்துறை செயலாளர்கள், அரசு அதிகாரிகள் பலரும் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

சர்ச்சை கருத்து விவகாரம்- மன்னிப்பு கோரினார் செல்லூர் ராஜூ

இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும... மேலும் பார்க்க

சென்னையில் சாலை பள்ளத்தில் கவிழ்ந்த கார்

சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த கார் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் காரில் பயணித்த 5 ... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி காண்போம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை” என்ற நூலினை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா இன்று(மே 17) சென்னையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்கர்

மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சென்னை வியாசர்பாடி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் போக்குவரத்து மற்றும் ம... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தமிழ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

டாஸ்மாக் ஊழல் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாற்றம், போக்குவரத்து ஒப்பந்தம், ... மேலும் பார்க்க