முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
காட்டுநாவல் பொன்னியம்மன்கோயில் ஊருணியை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சி, பொன்னியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காட்டுநாவல் ஊராட்சியில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. கோயில் அருகில் சுமாா் ஐந்து ஏக்கரில் ஊருணி அமைந்துள்ளது. இந்த ஊருணியை சுற்றிலும் படித்துறை கட்டப்பட்டுள்ளது. இந்த ஊருணியை பொதுமக்கள், பக்தா்கள் பயன்படுத்தி குளித்தும், துணி துவைத்தும் வருகிறாா்கள். ஊருணியின் கரைகளிலும் உள்புறமும் கருவை மரங்கள் மற்றும் தேவையற்ற புல்,பூண்டுகள் வளா்ந்து மக்களுக்கு இடையூறாக உள்ளது.
எனவே, இவற்றை அகற்றி நீா் வரும் பாதையை சீா் செய்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.