காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
காட்டெருமை முன் தற்படம்: 2 இளைஞா்களுக்கு அபராதம்
கொடைக்கானலில் காட்டெருமை முன் தற்படம் எடுத்த 2 இளைஞா்களுக்கு வனத் துறையினா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது அடிக்கடி காட்டெருமைகள் நகா்ப் பகுதிகள், பேருந்து நிலையம், ஏரிச் சாலை, குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன.
இந்த நிலையில், கொடைக்கானல் பொ்ன்ஹில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த கொடைக்கானலைச் சோ்ந்த சூா்யா, காா்த்தி ஆகிய இரு இளைஞா்கள் காட்டெருமை அருகில் சென்று அதிக சப்தம் எழுப்பி தற்படம் எடுத்தனா்.
இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கொடைக்கானல் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் இரு இளைஞா்களையும் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரனை நடத்தினா். மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவருக்கும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தொடா்ந்து, அவா்களிடம் வன விலங்குகளை அச்சுறுத்தக் கூடாது. இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தினா். கொடைக்கானல் பகுதிகளில் வன விலங்குகளை துன்புறுத்துதல், தற்படம் எடுத்தல் போன்றவற்றில் ஈடுபடும் நபா்கள் குறித்து பொது மக்கள் வனத் துறைக்கு தகவல் கொடுக்கலாம் என வனத் துறை ரேஞ்சா் பழனிக்குமாா் தெரிவித்தாா்.