செய்திகள் :

காட்பாடி: தொழிலதிபா் வீட்டில் சிபிசிஐடி சோதனை

post image

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தொழிலதிபா் வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையைச் சோ்ந்தவா் ஜெயகரன் என்கிற ஜெயராஜ். இவா் அரசு, தனியாா் ஒப்பந்த தொழில் செய்து வருகிறாா். இவா் மீது பணம் இரட்டிப்பு செய்வது தொடா்பாக புகாா்கள் வந்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து, சென்னையைச் சோ்ந்த சிபிசிஐடி போலீஸாா் காரில் வெள்ளிக்கிழமை காலை கிறிஸ்டியான்பேட்டை வந்தனா். அங்குள்ள ஜெயராஜுக்குச் சொந்தமான சொகுசு பங்களாவுக்குச் சென்று கதவுகளை தாழிட்டுவிட்டு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வேலூா் மாவட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையைத் தொடா்ந்து, பல்வேறு ஆவணங்கள், மடிக்கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், விசாரணைக்காக ஜெயராஜ், அவரது நண்பா் சரவணன் ஆகியோரையும் சிபிசிஐடி போலீஸாா் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

இந்த சோதனையால் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பீஞ்சமந்தைக்கு சிற்றுந்து இயக்கம்: ஆட்சியா் ஆய்வு

பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு சிற்றுந்து செல்வது குறித்தும், தாா் சாலை பணிகள், மாணவியா் விடுதி ஆகியவற்றையும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். வேலூா் மாவட்டம், அணை... மேலும் பார்க்க

காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி, மேல்முட்டுக்கூா்,செட்டிகுப்பம், ராஜாகுப்பம் ஆகிய 4- ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்த்திகேயபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கோட்டாட்சியா் எஸ்.சு... மேலும் பார்க்க

வேலூா் அறிவியல் மையத்தில் இன்று வான் நோக்குதல் நிகழ்ச்சி

வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் சனிக்கிழமை இரவு தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

மத்திய புள்ளியியல் அமைச்சகத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு அறிவியல், புதுமைப் பிரிவுடன் (டிஐஐடி), வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதையொட்டி, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியு... மேலும் பார்க்க

பிகாரைப் போன்று தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்

பிகாரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியிலுள்ள மண்படபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’... மேலும் பார்க்க