அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!
`காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..!’ - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்த காதலன்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரின் மூத்த மகன் வசந்த். ஐடிஐ படித்து வந்த நிலையில், கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். அப்போது வசந்த்துக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே வசந்த், காதலித்து வந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/wosbtt5f/IMG-20250206-WA0011.jpg)
தான் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது குறித்து வசந்துக்கு தெரியவரவே அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் கோயம்புத்தூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். காதல் தோல்வியால் சோகத்தில் இருந்து வந்துள்ளர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து கழுகுமலை காவல் நிலையபோலீஸார் வசந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வசந்த், தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதி வைத்த கடிதத்தை அவரது வீட்டில் இருந்து போலீஸார் கைப்பற்றினர். அதில், "காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பா, அம்மாவை தனது சகோதரர் காப்பாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/m39n6lad/kalugumalai-ps.jpeg)
இதுகுறித்து கழுகுமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொள்ளும் முன் அவர் தனது செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில், தனது புகைப்படத்தை பதிவிட்டு அதில், "ரெஸ்ட் இன் பீஸ்.. இது எனக்கு நானே வச்சது.. நாளை எல்லோரும் வையுங்க" என்று குறிப்பிட்டிருந்தார். இதனை யாரும் எதிர்பார்க்காத நிலையில், திட்டமிட்டபடி வசந்த் தற்கொலை செய்திருப்பது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-07/b358ad75-80f0-49be-9ab5-b7c3270429ac/WhatsApp_Image_2022_07_27_at_2_55_00_PM.jpeg)