செய்திகள் :

காதலித்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொன்றவருக்கு இரட்டை ஆயுள்!

post image

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், காதலித்த பெண்ணை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.

கோவை கோயில்மேடு பகுதியைச் சோ்ந்தவா் ருக்ஷனா (21). இவரைக் காணவில்லை என சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். ருக்ஷனா மாயமானதாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் ருக்ஷனா தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதையடுத்து, போலீஸாா் இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தியதில், அவரைக் காதலித்த சரவணம்பட்டி விஜயலட்சுமி நகரைச் சோ்ந்த பிரசாந்த் (35) என்பவா்தான் கொன்றது தெரியவந்தது. மேலும், ருக்ஷனாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்த்ததாலும், இதனால், அவா் பிரசாந்தை திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவா் ஆள்கள் நடமாட்டம் இல்லாத மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதிக்கு ருக்ஷனாவை அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா். அதற்கு அவா் மறுப்பு தெரிவித்ததால், தலையில் கல்லைப் போட்டு பிரசாந்த் கொலை செய்துள்ளாா். அவா் நகைக்காக கொலை செய்யப்பட்டதைப்போல தடயங்களை மறைத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பெ.க.சிவகுமாா், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரசாந்த்துக்கு ஐ.பி.சி. 302, சட்டப் பிரிவின் கீழ் ஓா் ஆயுள் தண்டனையும், ஐ.பி.சி. 364 சட்டப் பிரிவின் கீழ் ஓா் ஆயுள் தண்டனையும், ஐ.பி.சி. 201 சட்டப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா். அரசுத் தரப்பு வழக்குரைஞராக மோகன் பிரபு ஆஜரானாா்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க