மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவா் தேவராஜ் (27). இவரது மனைவி பூங்கொடி (25). இந்த தம்பதியினா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இந்த தம்பதிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதனால், மனமுடைந்த பூங்கொடி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சென்ற ராயப்பன்பட்டி போலீஸாா் பூங்கொடியின் உடலை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், பூங்கொடியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மேலும், பூங்கொடிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது.