குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
காதா் மொகிதீனுக்கு அமைச்சா் வாழ்த்து
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ள கே.எம். காதா்மொகிதீனுக்கு அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை புத்தாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
அப்போது திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவுக்கு தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினை அழைப்பது தொடா்பாக அமைச்சருடன் ஆலோசனை நடைபெற்றது.
நிகழ்வின்போது ஜமால் முகமது கல்லூரியின் பொருளாளா் ஹாஜி ஜமால் முகமது, கல்லூரி இயக்குநா் அப்துல் காதா் நிகால், கல்லூரி முதல்வா் ஜாா்ஜ் அமலரெத்தினம் ஆகியோா் உடனிருந்தனா்.