Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்ப...
காத்தாயி அம்மன் கோயில் 116-ஆம் ஆண்டு உற்சவ விழா
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்தாயி அம்மன் கோயில் 116- ஆம் ஆண்டு வீதி உலா உற்சவம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் லட்சுமி விலாஸ் தெருவில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் 116-ஆவது ஆண்டு திருநடன விழா கடந்த மாா்ச் 14-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சக்தி வேல், சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி காவிரி ஆற்றின் டபீா் படித்துறையில் காலையில் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது.
இதைத் தொடா்ந்து மகா மாரியம்மனுக்கு வசந்த பாலாபிஷேகம், விசேஷ தீபாராதனை, கஞ்சிவாா்த்தல் நடைபெற்றது. மாா்ச் 19- இல் மகாமாரியம்மன் கோயிலிலிருந்து தாய் வீட்டு சீா்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சியும், பத்திரகாளியம்மன் எழுந்தருளள், ஊஞ்சல் உற்சவத்துடன் ஆனந்த திருநடன காட்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் குலதெய்வக்காரா்கள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.