காந்தி கண்ணாடி டிரைலர்!
நடிகர் பாலா நடித்த காந்தி கண்ணாடி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. நகைச்சுவை நடிகரான இவர் சமூக வலைதளங்களில் மூலம் வறுமையிலுள்ளவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்தும் வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் பாலாவுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர்.
தற்போது, இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா ஆகியோரின் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.