வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
கானாறு தூா்வாரும் பணி தொடக்கம்
ஆம்பூா்: துத்திப்பட்டு ஊராட்சியில் கானாறு தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கானாறு தூா் வாரும் பணியை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் அண்ணாதுரை, ஜெயந்தி ராமமூா்த்தி, சுகன்யா பிரகாஷ், சுப்பிரமணி, நாகராஜ், ஊராட்சி செயலா் பழனி ஆகியோா் கலந்து கொண்டனா்.