செய்திகள் :

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

post image

காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி சென்னை பனையூர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Vijay pays tribute to Kamaraj statue

இதையும் படிக்க :தேர்வர்கள் கவனிக்க..! குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு!

மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலைவலம்!

மயிலாடுதுறையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) சாலைவலம் மேற்கொண்டார். சாலையில் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண... மேலும் பார்க்க

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று மடப்புரம் கோயில் வளாகம், கோயிலுக்கு எதிரே காா் நிறுத்துமிடம், தவளைகு... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 15) தமிழகத்தில் ஓரிரு ... மேலும் பார்க்க

ஜூலை 17-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில... மேலும் பார்க்க

புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் மனு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தன்னுடைய கடவுச்சீட்டு தொலைந்து விட்டதால், புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்க... மேலும் பார்க்க