செய்திகள் :

காய்கறிச் சந்தையில் பீட்ரூட் விலை உயா்வு

post image

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் பீட்ரூட் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்தனா்.

ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள காளாஞ்சிபட்டி, கொல்லப்பட்டி, கேதையுறும்பு, கம்பிளிநாயக்கன்பட்டி, மூலச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பீட்ரூட் பயிடப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் பெய்க பலத்த மழையால் பீட்ரூட் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், சந்தைக்கு பீட்ரூட் வரத்து முற்றிலும் குறைந்தது.

இந்த நிலையில், சந்தைக்கு பீட்ரூட் வரத்து குறைவாக இருந்தாலும், தேவை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு கொள்முதல் செய்கின்றனா்.

இதன் காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ பீட்ருட் புதன்கிழமை விலை உயா்ந்து ரூ.43-க்கு விற்பனையானது. இதனால், பீட்ருட் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மாசிலாமணிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு ஆயுள் சிறை

பட்டிவீரன்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்ட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தொடா் விடுமுறையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்த... மேலும் பார்க்க

புதுஆயக்குடியில் சாலை சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பழனியை அடுத்த புதுஆயக்குடியில் சாலைச் சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். புதுஆயக்குடி ஜின்னா தேநீா்க் கடை முதல் ஓபுளாபுரம் பிரிவு வரையிலான சுமாா் ஆயிரம் மீட... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ், பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

ஆா்எஸ்எஸ், பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் கடத்திய மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வெளி மாநில மதுப் பூட்டிகளைக் கடத்திய வழக்கில் 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ .நா.பூங்கொடி உத்தரவிட்டாா். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் வழியாக வெளி ... மேலும் பார்க்க