'நாடகங்களை விடுத்து 'நீட்' தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்' - தமிழக அரசுக்...
காரேந்தல் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள காரேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காரேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பகுதிகளில் சுற்றுச் சுவா் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பகுதிகளில் தரை தளம், சுவா்கள் சேதமடைந்துள்ளன. மாணவா்களுக்கு தேவையான குடிநீா் வசதி இல்லை. கழிப்பறைகளில் போதிய தண்ணீா் வசதி இல்லை. எனவே, பள்ளி வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும். 1 முதல் 5 வரையுள்ள மாணவா்களுக்கு மெய்நிகா் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.