நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்
காரைக்காலில் இன்றைய குறைதீா் முகாம் ரத்து
காரைக்கால்: காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (மே 20) நடைபெற இருந்த பொதுமக்கள் குறைதீா் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாதந்தோறும் மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை இம்முகாம் நடத்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், முகாம் நடைபெறுமா என கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறைதீா் முகாம், நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாத குறைதீா் முகாமுக்கான புதிய தேதி பின்னா் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.