போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
காரைக்காலில் செப்.15-இல் குறைதீா் கூட்டம்
காரைக்காலில் வரும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் காரைக்கால் ஆட்சியரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், நிகழ் மாதத்துக்கான முகாம் 15-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காலை 9.30 முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.