சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்...
காரைக்குடியில் பாரதியாா் நினைவு தினம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகாகவி பாரதியாா் நினைவு தினத்தையொட்டி நினைவஞ்சலி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் ஏஜி. ராஜா தலைமை வகித்தாா். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் நா. சாத்தையா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் சங்க மாநிலத் துணைத் தலைவா் மணவழகன், மாநிலக் குழு உறுப்பினா் காஜா முகைதீன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் மாரி, ஒலி, ஒளி அமைப்பாளா் சங்க மாவட்டத் தலைவா் முத்துச் சரவணன், ஆட்டோ சங்க மாநகர செயலா் தங்கேஸ்வரன், கட்டட சங்க மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினா் பால்பாண்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பாரதியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.