கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துற...
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் விடுப்பு எடுத்து போராட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சிவகங்கை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தோ்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்தியுள்ளனா். ஆனால் கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப் படி தமிழக முதல்வா் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவில்லை.
எனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா். இதற்காக இதுவரை 71 போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தை சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளா் க. ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மு. காளிமுத்து, சேவுகமூா்த்தி, செல்வம், அன்பரசன், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் அ. குணசேகரன், மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட இணைச் செயலா் எம். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒருங்கிணைத்தனா்.