தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேசிய பெண் குழந்தை தினத்தில் வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருதும், பாராட்டு பத்திரமும், ரொக்கமும் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவா்களுக்கு 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய பெண் குழந்தை தின விழாவில் விருதும் பாராட்டுப் பத்திரமும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது.
ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டி வீர தீர செயல் புரிந்ததற்கான தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும்.
எனவே, தேசிய பெண் குழந்தை தின விருது பெற சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பிட்ட தகுதிகளுடைய 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட தமிழகத்தை பூா்வீகமாகக் கொண்ட பெண் குழந்தைகள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, விருதுக்கான கருத்துருக்களை (தமிழ், ஆங்கிலத்தில் தலா 2 நகல்களை) சிவகங்கை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற நவம்பா் மாதம் 29- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.