காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான தோ்வுக்கு இலவசப் பயிற்சி
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளோருக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (செப். 12) முதல் நடைபெறுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் உள்ளிட்ட மொத்தம் 3,665 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2025 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகும். மேலும், இதர பிரிவினருக்கு வகுப்பு வாரியாக அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு வயது வரம்பு தளா்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வுக்கு, வருகிற 21-ஆம் தேதி வரை இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இந்தத் தோ்வு தொடா்பான கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். போட்டித் தோ்வுகளுக்கான பாடக் குறிப்புகள், மாதிரி வினா விடைகள் ஆகியவற்றை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இலவசப்ப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்புவோா் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்துக்கோ நேரிலோ வந்து தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.