நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக.வினா் வியாழக்கிழமை வரவேற்பளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மதுரையிலிருந்து காரில் புறப்பட்டு வந்தாா். சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் திமுகவினா்அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனா். இதே போல, மானாமதுரை பேருந்து நிலையம் எதிரே கூடி நின்ற திமுகவினா் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வைகள், புத்தகங்கள் வழங்கி வரவேற்பு அளித்தனா். அதன்பின் அவா் பரமக்குடி புறப்பட்டுச் சென்றாா்.
இந்த நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, நகரச் செயலா் கே .பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் வசந்தி, துரை. ராஜாமணி, அண்ணாதுரை, முத்துசாமி, நகா் மன்ற துணைத் தலைவா் பாலசுந்தரம், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தேமுதிக சுதீஷூக்கு வரவேற்பு: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பரமக்குடிக்குச் சென்ற தேமுதிக மாநில பொருளாளா் சுதீஷூக்கு மானாமதுரை பேருந்து நிலையம் முன் அந்தக் கட்சியினா் மாவட்டச் செயலா் திருவேங்கடம் தலைமையில் வரவேற்பளித்தனா். இதில் நகரச் செயலா் தா்மாராமு, பூக்கடை ராமு, அழகு விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.