கார் பந்தயத்தில் வெற்றி... துள்ளிக்குதித்த அஜித்!
நடிகர் அஜித் குமாரின் அணி கார் பந்தயத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
துபையில் நடைபெற்று வரும் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியாவிலிருந்து அஜித் குமார் ரேசிங் என்கிற பெயரில் நடிகர் அஜித் குமார் தன் குழுவினர் கலந்துகொண்டார்.
அங்கு, நேற்றிலிருந்து (ஜன.11) நடைபெற்று வந்த 911 GT3 R என்ற கார் பந்தயப் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: சசிகுமார் - ராஜு முருகன் படப்பிடிப்பு நிறைவு!
வெற்றிபெற்றதும் சக வீரர்களுடன் அஜித் உற்சாகத்தில் துள்ளிக் குதித்ததுடன் இந்திய தேசியக் கொடியையும் அசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கார் பந்தயத்தை நேரில் காண நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலர் வந்திருந்தனர். போட்டியில் அஜித் அணி வெற்றிபெற்றதை பெரிதாகக் கொண்டாடி வருகின்றனர்.